அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (82). இவரது மனைவி கமலம் (70). இவர்கள் மருத்துவ சிகிச்சை பெற கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நேற்று இரவு காரில் புறப்பட்டனர். இவர்களுடன் மருமகன் சேகர் (52) உடன் சென்றார். காரை பொள்ளாச்சியை சேர்ந்த அய்யப்பன் (53) என்பவர் ஓட்டி சென்றார்.
இன்று அதிகாலை விருதுநகர்- மதுரை 4 வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி முன்னால் சென்றுக்கொண்டிருந்த அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் சுப்பிரமணியன், கமலம், சேகர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஓட்டுநர் அய்யப்பனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தமவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற