திருமங்கலம் அருகே சாலை ஓரத்தில் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே சாலை ஓரத்தில் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் 4 வழிச்சாலையில் சாலையோர பள்ளத்தில் ஒரு ஆணும், சிறுமியும் வாய் மற்றும் மூக்கில் துரை வெளியேறிய நிலையில் உயிரிழந்து கிடந்தனர். இதனை, அவ்வழியாக சென்ற தனியார் நிறுவனக் காவலாளி ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அந்த இடத்தில் சோதனை நடத்திய போது களைக் கொல்லிக்கு பயன்படுத்தப்படும் இரு மருந்து பாட்டில்கள் கிடந்தன. மேலும் சடலங்களுக்கு அருகே கிடந்த பையை சோதனையிட்ட போதும் அவர்கள் தொடர்பான விவரங்கள் தெரியவில்லை. செல்போனில் இருந்த விவரங்கள் அழிக்கப்பட்டு இருந்ததுடன், சிம் கார்டுகளும் அகற்றப்பட்டு இருந்தன.
இந்நிலையில், உயிரிழந்து கிடந்த நபரின் சட்டை பாக்கெட்டில் இருந்து ஓட்டுநர் உரிமம் மற்றும் உயிரிழந்து கிடந்த சிறுமியின் புகைப்படம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அதில் இருந்த விவரங்களின் அடிப்படையில், அவர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் கிருபாகரன் (41), அந்தச் சிறுமி அவரது மகள் ஜூலியா (8) என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியதில் கிங்ஸ்டன் கிருபாகரனை அவரது மனைவி விவாகரத்து செய்ததே தற்கொலை காரணம் என்று கூறப்படுகிறது.