மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சில் தண்டிக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த நபரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம், கோவில்பாப்பாகுடி சின்ன கண்மாய் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22). இவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, கொலை வழக்கு மற்றும் கஞ்சா வழக்கு ஆகியவை நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சூர்யா, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஜாமில் வெளிவந்து தனது வீட்டில் இருந்துள்ளார்.
பீகாரில் ரூ.1500, தமிழ் நாட்டில் 2.5 லட்சம்; குழந்தை இல்லாதவர்களை டார்கெட் செய்த வடமாநில தம்பதி
undefined
இந்த நிலையில் நேற்று தனது தாயார் வீட்டில் குளிக்கச் செல்லும் பொழுது நள்ளிரவில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட மர்ம கும்பல் சூர்யாவை தாக்கி கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டியதால் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே சூர்யா உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த அலங்காநல்லூர் காவல் துறையினர் சூர்யாவின் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரதமர் மோடியிடம் தமிழர்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்வைப்பேன் - மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு
கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த சூர்யாவை ஐந்திற்கும் மேற்பட்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது யார்..? எதற்காக கொலை செய்தார்கள்.? முன் பகையா.? அல்லது வேறு ஏதும் காரணமா..? என்பது குறித்து அலங்காநல்லூர் போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.