5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி கிடையாதா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு என்ன ?

By vinoth kumar  |  First Published Feb 10, 2022, 8:06 AM IST

திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 5 சவரன் விவசாய நகைக்கடனை தள்ளுபடி செய்து 2021 நவம்பர் 1-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. நகைக்கடன் தள்ளுபடியால் அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும். கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் கூட்டுறவு வங்கிகள் இல்லை. இதனால், பலரும் பொதுத்துறை வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளனர். 

நகைக்கடன் தள்ளுபடி அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரை சேர்ந்த லிங்கராஜ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் 5 சவரன் விவசாய நகைக்கடனை தள்ளுபடி செய்து 2021 நவம்பர் 1-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. நகைக்கடன் தள்ளுபடியால் அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும். கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் கூட்டுறவு வங்கிகள் இல்லை. இதனால், பலரும் பொதுத்துறை வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளனர். 

Latest Videos

undefined

அந்த அரசாணையில் முறையாக வட்டி செலுத்தாதவர்களுக்கும் தள்ளுபடி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் நகை அடமான கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடு நடைபெற்றிருப்பதாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே விவசாய நகைக்கடன் தள்ளுபடி அரசாணையை ரத்து செய்து, அதை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த மனு ஏற்புடையதல்ல கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

click me!