உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டியில் கடன் பிரச்சனையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகை பட்டறை உரிமையாளர் சரவணன். இவருக்கு மனைவி ஸ்ரீநிதி, மகள் மகாலட்சுமி(10), அபிராமி(5), என்ற 2 மகள்களும், அமுதன் 5 என்ற ஒரு மகனும் இருந்தனர். பல வருடங்களாக நகை பட்டறை நடத்தி வந்துள்ளார் சரவணன், கடன் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளன.
இந்நிலையில். இன்று காலையில் சரவணன், ஸ்ரீநிதி, இருவரும் தங்கள் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாங்களும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.