பெரம்பலூரில் காரில் கஞ்சா கடத்திய கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூரில் காரில் கஞ்சா கடத்திய கும்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதை பொருள் தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருமாந்துறை சுங்கச்சாவடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட முயன்றனர். ஆனால், கார் ஓட்டுநர் நிறுத்தாமல் வேக இயக்க முற்பட்டார்.
இதனையடுத்து, சினிமா பாணியில் அவர்களது காரை விரட்டி சென்றனர். இருப்பினும் காரில் சென்றவர்கள் காரை நிறுத்தாமல் சென்றனர். இதனையடுத்து, துப்பாக்கியால் கார் டயரில் போலீசார் சுட்டனர். இதில், கார் சாலையில் தாறுமாறாக ஓடி நின்றது. அப்போது காரில் வந்த கும்பல், அங்கிருந்து தப்பிசெல்ல முயன்றனர். அவர்களை துப்பாக்கி முனையில் மதுரையை சேர்ந்த படைமுனியசாமி, வழிவிடு முருகன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து 180 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சினிமா மிஞ்சும் அளவில் ரன்னிங், சேசிங் போன்ற சம்பவங்கள் நடைபெற்றுதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.