விஐபிகளுக்காக உடைக்கப்பட்ட 137 ஆண்டு பாரம்பரியமிக்க ஏவி மேம்பாலச்சுவர் - மக்கள் கொந்தளிப்பு

By Velmurugan s  |  First Published May 4, 2023, 10:43 AM IST

விஐபி வாகனங்களை நிறுத்த 137 ஆண்டு பாரம்பரியமிக்க வைகை ஏவி மேம்பாலச்சுவர் உடைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 


மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கி விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. திருக்கல்யாணம், தேர்த்திருவிழா ஆகியவை சிறப்பாக நடைபெற்ற நிலையில் நாளை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த திருவிழாவில் 15 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் எவ்வித சிரமத்தையும் சந்திக்காமல் இருக்க அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறை இணைந்து மேற்கொண்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

கோவையில் கல்லூரி மாணவி கொலை; ஆண் நண்பருக்கு காவல்துறை வலைவீச்சு

இந்நிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வரும் விஐபிக்களின் வாகனங்கள் வருவதற்காக 137 ஆண்டுகள் பாரம்பரியமான வைகை ஏவி பாலத்தின் கைப்பிடி சுவரை உடைத்து பாதை அமைத்துள்ளனர். மேலும், அவர்கள் வாகனங்களை மூங்கில் கடை தெரு வழியாக அனுமதித்து ஆழ்வார்புரம் வைகை ஆற்றின் உள்ளேயே 50-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்துவுதற்கு தனி பார்க்கிங் ஏரியா அமைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டுப்போட்டியில் படுகாயமடைந்த கருப்பு கொம்பன் காளை உயிரிழப்பு.. அதிர்ச்சியில் கலங்கிய விஜயபாஸ்கர்..!

ஏவி பாலத்தின் தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டதாலும், ஆற்றுக்குள்ளேயே விஐபிகளின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் அமைக்கப்பட்டதற்கும் பொதுமக்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

click me!