கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மலை கிராமங்களில் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரின் செயலால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை கிராமத்தில் இன்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப், பொது மக்களிடம் இருந்து கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக தகுதியான 192 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு 58 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து இருதுகோட்டை அருகே உள்ள திருமா நகர் என்ற மலை கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் 2 கிமீ தூரம் நடந்து சென்று கிராமத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
2 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும் 60 கி.மீ. ஓடும் ஸ்கூட்டரை தயாரித்து சேலம் மாணவர் அசத்தல்
அப்போது கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி வேண்டியும், வீட்டுமனை பட்டா வேண்டியும் கோரிக்கை வைத்த மலை கிராம மக்களுக்கு தனி நபர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி தரப்படும் என உறுதியளித்தார்.
நெல்லையில் மினி பேருந்து ஏறியதில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு
மேலும் அப்பகுதியில் அங்கன்வாடி மையம், சமுதாயக்கூடம் மற்றும் சாலை வசதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் படிப்படியாக நிறைவேற்றி கொடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார். கடந்த 30 ஆண்டுகளாக எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தவித்த அப்பகுதி மலைவாழ் மக்கள் மாவட்ட ஆட்சியரின் வருகையால் மகிழ்ச்சி அடைந்தனர்.