கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி திருத்தனி முருகன் என்ற தனியார் பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது. பேருந்து நாட்டார் கொட்டாய் என்ற இடத்தில் வந்த போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் பேருந்தின் மீது பயங்ரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த பர்கூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 24), பிரித்திவி ராஜ் (25), ஹேமநாத் (26) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
ராணிபேட்டையில் பயங்கரம்; தாய், 2 குழந்தைகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு
விபத்து காரணமாக பர்கூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பர்கூர் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி அதே பகுதியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.