கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பகுதியைச் சேர்ந்த சபரி (வயது 24), நோபிக் (24), கர்நாடகா மாநிலம் பொம்மி சந்திரா பகுதியைச் சேர்ந்த ஹர்ஷா (27), மற்றும் ஒருவர் என 4 பேர் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாகத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புதன் கிழமை அதிகாலையில் கிருஷ்ணகிரி அருகே பந்தாரப்பள்ளி அருகே சாகசத்தில் ஈடுபட்டபோது இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின.
நெல்லையில் மாயமான இளம் பெண் கிணற்றில் பிணமாக மீட்பு; காவல் துறையினர் விசாரணை
இந்த விபத்தில் படுகாயமடைந்த சபரி, ஹர்ஷா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலத்த காயமடைந்த நோபிக், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசாரின் கண்களில் மிளகாய் பொடி தூவி 2 குற்றவாளிகளுக்கு சரமாரி அரிவாள் வெட்டு
மேலும் சாகசத்தில் ஈடுபட்ட மற்றொரு நபர் விபத்து ஏற்பட்டவுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.