மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்று ஓசூர் மாணவர்கள் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த 9ம் தேதி ஏர் கன் அசோசியேசன் ஆப் இந்தியன் அமைப்பு சார்பில் 8 வது தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி ஏர் கன் அசோசியேசன் சார்பில் 12 துப்பாக்கி சுடும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் இருந்து கிருஷ்ணகிரி சேலம், திருப்பத்தூர், விழுப்புரம், சென்னை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 44 மாணவர்கள் பங்கு பெற்றனர். மேலும் இந்திய அளவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்காளம், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பங்கு பெற்றனர்.
திருச்சியில் 7 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை
பல்வேறு பிரிவுகளில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் ஓசூர் மாணவர்கள் 8 தங்கங்கள், 3 வெள்ளிகள் மற்றும் ஒரு வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்று ஒசூர் திரும்பிய மாணவர்களை பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் பாராட்டி வாழ்த்தினர்.