கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை அருகே பெங்களூருவுக்கு பூ லோடு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் எதிரே வந்த சிறிய கனரக வாகனம் மீதி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சிறிய கனரக வாகனத்தில் 14 பேர் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலை வந்துள்ளனர். அப்போது ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை அருகே சென்று கொண்டு இருக்கும் பொழுது எதிரே பூ ஏற்றி வந்த கனரக வாகனம் மீது அதிவேகமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மாண்டியா தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஊத்தங்கரை மருத்துவமனையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை
அதிகாலையில் ஏற்பட்ட இந்த கோர விபத்தால் அப்பகுதியே பரபரப்பாக உள்ளது. திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருவுக்கு பூ ஏற்றி செல்லும் வாகனங்கள் இப்பகுதியில் அதி வேகமாக செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் தொடர் விபத்து ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.