கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஏரியில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர், தேர்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 5 சிறுவர்கள் கோடை வெயிலை தணிக்க வெங்கடாபுரம் என்னும் கிராமத்தில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளனர். அதில் 2 சிறுவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கியுள்ளனர். இதனை பார்த்த மற்ற சிறுவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டுள்ளனர்.
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியினர் விரைந்து வந்து நீரில் மூழ்கி தேடினர். ஆனால் சிறுவர்கள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
வாகன ஓட்டிகளிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்
அப்போது நீரில் மூழ்கிய 2 சிறுவர்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். விபத்து குறித்து காவல் துறையினர் மேற்க்கொண்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் சேசாங் (வயது 12), விநோத் சிங் (11) என தெரியவந்தது. உயிரிழந்த சிறுவர்களின் உடல்களை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கைதிகளின் பற்களை உடைத்த அதிகாரி மீது கொலை வழக்கு பதிய வேண்டும் - முன்னாள் அமைச்சர் கோரிக்கை
இதனைத் தொடர்ந்து சிறுவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.