கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கரடியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பர்கூர் அத்திமரத்துப்பள்ளி கிராமத்தை சேர்ந்த உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு சிறுமி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் தொடர்ந்து இருவரும் பேசி வந்துள்ளனர்.
ஜாமீனில் வெளியே வந்த காதலனை பார்க்க விடாததால் 15 வயது சிறுமி தற்கொலை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த கரடியூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி பர்கூர் அத்திமரத்துப்பள்ளி கிராமத்தை சேர்ந்த உறவுக்கார இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு சிறுமி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்படி இருந்த போதிலும் தொடர்ந்து இருவரும் பேசி வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- என்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்கிட்டாரே.. என் வாழ்க்கையை நாசம் செஞ்சவங்கள தூக்குல போடுங்க.. ஜெகன் மனைவி கதறல்
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கள் மகளிடம் உறவுக்கார இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு அந்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி அந்த இளைஞர் ஜாமீனில் வெளியே வந்தார். இதனையறிந்த சிறுமி அன்றைய தினம் அந்த இளைஞரை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்து அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். இதனால், கையில் தயாராக வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார். குடித்த சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதையும் படிங்க;- சிறுமியை ஸ்டேட் விட்டு ஸ்டேட் கூப்பிட்டு போய் ஆசைவார்தை கூறி ஆசை தீர ரூம் போட்டு உல்லாசம்! வெளியான பகீர் தகவல்
இதனையடுத்து, அவரை உடனே அங்கிருந்தவர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.