கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தந்தை உயிரிழந்த துக்கத்திலும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதச் சென்ற பள்ளி மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி கீழ் காலனியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் உடல் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இவரது மகன் ஜெகத், கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தொழில் பிரிவு பாடப்பிரிவு படித்து வருகிறார்.
தற்பொழுது பொது தேர்வு எழுதி வருகிறார், இந்த நிலையில் நேற்று இரவு இவரது தந்தை கோடீஸ்வரன் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார், இந்த துக்க சமயத்திலும் 12ம் வகுப்பு மாணவன் ஜெகத் இன்று தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்தார், அவரை சக மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆறுதல் கூறி தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கோவை மலை அடிவாரத்தில் காயத்துடன் சுற்றித் திரிந்த காட்டு யானைக்கு மருத்துவர் குழு சிகிச்சை
தந்தை இறந்த துக்கத்திலும் ஆண்டு முழுக்க நாம் படித்த படிப்பு வீணாக கூடாது என்ற காரணத்தினால் மாணவன் தேர்வு எழுத வருகை தந்தது குறிப்பிடத்தக்கது, அவரது உடன் ஊர் நாட்டாமை வெங்கடேசன், ஊர் தர்மகத்தா சுரேஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவருடன் இருந்தனர்,