கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதில் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகே உள்ள காட்டு கொலை கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன் என்பவரது மகன் ராம்குமார் 27 இவர் இன்று காலை மோட்டுப்பட்டி அருகே உள்ள மலை அடிவாரத்தில் காலை இயற்கை உபாதைக் கழிக்க சென்ற பொழுது இரண்டு காட்டு யானை வந்துள்ளது.
அந்த காட்டு யானைகளை தன் செல்போனில் செல்பி எடுக்க முயன்ற பொழுது யானை மிதித்து ராம்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார் இருந்த ராம்குமாரின் உடலை மீட்டு பிரியதர் பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் மேலும் இது குறித்து பாரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் யானை தற்போது அகரம் அருகே உள்ள மருதேரி ஏரியில் இருந்து அகரம் ஏரிக்கு வந்து ஏரியில் தண்ணீரில் குளித்து தண்ணீரை பீச் எடுத்து விளையாடியது.
இதையும் படிங்க..பாஜகவில் இணையும் முன்னாள் முதல்வர்.. அடேங்கப்பா இவரா.? இது நம்ம லிஸ்ட்ல இல்லையே.!!
பின்னர் யானை அகரம் கிராமத்தில் இருந்த நிலையில் வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை மீண்டும் ஏரிக்கு விரட்டியடித்து தட்ரஅள்ளி வழியாக மாந்தோப்பு மற்றும் தென்னந்தோப்புகள் வழியாக யானை விரட்டி தர்மபுரி மாவட்ட பகுதிக்கு விரட்டி சென்றுள்ளனர். யானை மிதித்து ஒருவர் இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க..ஃபர்ஸி வெப் சீரிஸை போல ரோட்டில் பணத்தை வீசிய பிரபல யூடியூபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இதையும் படிங்க..2022ல் 11,000 பேர்.. 2023ல் 10,000 பேர் - ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் மெட்டா நிறுவனம்