கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காட்டு யானை தாக்கியதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லை பகுதியில் பன்னார் கட்டா வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டியுள்ள கக்கலி புரா என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்கியிருந்து பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக இங்கு எல்லை பகுதியில் பயன்படுத்தப்படும் நாய்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தங்கியுள்ள பயிற்சி மையத்திற்குள் புகுந்துள்ளது. அப்போது பயிற்சி மையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படை வீரரை காட்டு யானை தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பரபரப்பான பேருந்து நிலையத்தை மணமேடையாக்கிய காதல் ஜோடி; இணையத்தில் வைரலாகும் வீடியோ
தொடர்ந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டு யானை தாக்கி உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பரோட்டா சாப்பிட்டு படுத்த இன்ஜினியர் உயிரிழப்பு; பரோட்டா பிரியர்கள் அதிர்ச்சி