கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொமாரணப்பள்ளி கிராமத்தில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் அதே பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் (வயது 40) என்பவர் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப்பிற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஒசூர் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ராஜீவ் காந்தி, ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞான மீனாட்சி மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையினர் ஆகியோர் கொமாரணப்பள்ளியில் உள்ள அசோக்குமாரின் கிளினிக்கில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அசோக்குமார் ஆங்கில மருத்துவம் படிக்காமல் முப்சிரின் பேகம் என்பவரது பெயரில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
கொள்ளிடம் ஆற்றில் பெண் மர்ம மரணம்; அழுகிய நிலையில் உடல் மீட்பு
இது குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் மத்திகிரி காவல் துறைியனரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து காவல் துறையினர் போலி மருத்துவர் அசோக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து அதிகாரிகள் கிளினிக்கில் இருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து கிளினிக்கிற்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; மிளகாய் பொடியை தூவிச் சென்ற மர்ம நபர்கள்