ஒகேனகல்லுக்கு சுற்றுலா சென்ற கார்மெண்ட்ஸ் தொழிலாளி காவிரி ஆற்றில் மூழ்கி பலி

By Velmurugan sFirst Published May 3, 2023, 2:28 PM IST
Highlights

ஈரோட்டில் இருந்து ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்த பின்னலாடை நிறுவன தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரது மகன் சந்திரசேகரன் (வயது 36). பெருந்துறையில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வந்தார். திருமணமான இவருக்கு பேபி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

இந்நிலையில் கடந்த 30ம் தேதி தன்னோடு வேலை செய்யும் 25 நண்பர்களுடன் மினி பேருந்தில் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்துள்ளார். பின்னர் அங்கே அறை எடுத்து தங்கியுள்ளார். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த இவர்கள் பின்னர் மாமரத்துகடவு காவிரி ஆற்றில் குளித்துள்ளனர். குளித்து முடித்த பின்னர் அனைவரும் அறைக்கு சென்று விட்டனர். 

வாளியில் இருந்த தண்ணீரில் தவறி விழுந்து இரண்டு வயது சிறுவன் உயிரிழப்பு

நீண்ட நேரம் கடந்தும் சந்திரசேகரன் மட்டும் அறைக்கு திரும்பவில்லை. பின்னர் நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் சந்திரசேகரனை காணவில்லை. உடனடியாக நண்பர்கள் ஒகேனக்கல் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் மாமரத்துகடவு பரிசல் துறைக்கு வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்று கரையோரப் பகுதிகளில் தேடினர். 

உடன் பிறந்த தம்பியுடன் கள்ளத்தொடர்பு; மனைவியை வெட்டி கொன்ற கணவன் காவல் நிலையத்தில் சரண்

இந்நிலையில் தொங்கு பாலம் காவிரி ஆற்றில் சந்திரசேகரனின் உடலை காவல் துறையினர் கைப்பற்றினர். இதை பார்த்த நண்பர்கள் கதறி துடித்தனர். மேலும் கைப்பற்றிய உடலை பிரேத பரிசோதனைக்காக பெண்ணாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!