கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து பெங்களூரு நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்து கெலமங்கலம் அருகே ஒரு வளையில் வேகமாக திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் கவிழ்ந்தது.
ஓசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நாகமங்கலம் கிராமத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து பெங்களூரு நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, பேருந்து கெலமங்கலம் அருகே ஒரு வளையில் வேகமாக திரும்பிய போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் கவிழ்ந்தது.
இதையும் படிங்க;- விபத்தில் சிக்கிய கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார்..! சுற்றுலா வாகனம் மோதியதால் பரபரப்பு
இந்த விபத்தில் 3 பயணிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு யாருக்கு, எப்போது கிடைக்கும் ? டோக்கன் வாங்குவது எப்படி ? முழு தகவல்கள்!