ஓட்டுநர் பணிக்கு என்று கூறி வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டு வேலைகளை செய்யச் சொல்வதாகவும், உணவு வழங்காமல் கொடுமை படுத்துவதாகவும் பெண் வீடியோ வெளியிட்ட நிலையில், தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி அவரது கணவர் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிருஷ்ணகிரி கோட்டை தெருவை சேர்ந்தவர் பஷீர் மனைவி நஜ்மா. இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹக்கீம் என்பவர் தொடர்பு கொண்டு சவுதியில் சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட பெண் ஓட்டுநர் தேவை எனவும் நல்ல சம்பளம் வழங்கப்படும் எனவும் தெரிவித்து உள்ளார். இதனை அடுத்து ஏஜெண்ட் ஹக்கீமிடம் 2 லட்சம் பணம் கொடுத்ததைத் தொடர்ந்து கேராளா விமான நிலையத்தில் இருந்து ஓட்டுநர் பணிக்காக நபியாவை அனுப்பி வைத்து உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் ஓட்டுநர் பணிக்காக சவுதி சென்ற நபியாவை வீட்டு வேலை செய்யுமாறு கொடுமை படுத்துவதாக நபியா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ஓட்டுநர் வேலை என கூறி வீட்டு வேலை செய்ய சொல்வதாகவும், பாஸ்போர்ட்டை பறித்து கொண்டு உணவு அளிக்கமல் பட்டினி போட்டு கொடுமை செய்வதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளார். மேலும் இங்கு உள்ள சீதோஷன நிலையால் வலிப்பு நோய் வருகிறது. அதற்கு உரிய சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். இதனால் தான் இறந்து விடுவேனோ என அச்சமாக உள்ளதால் தன்னை எப்படியாவது இந்தியாவுக்கு அழைத்துக் கொள்ளுங்கள் என கோரிக்கை விடுத்து உள்ளார்.
புதுவையில் சற்று நேரத்தில் சரிந்து விழுந்த பிரமாண்ட நீர் தேக்க தொட்டி
இந்த நிலையில் நபியாவின் கணவர் பஷீர் தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.