ஓசூர் அருகே கலவரத்தில் ஈடுபட்டவரை எஸ்.பி லத்தியால் தாக்கி பூட்ஸ் கால்களால் உதைக்கும் வீடியோ வைரலான நிலையில் பெண் காவலரிடம் தவறாக நடந்ததால் அந்த நபர் அப்புறப்படுத்தப்பட்டதாக மாவட்ட எஸ்.பி சரோஜ்குமார் தாகூர் விளக்கம் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எருதுவிடும் போட்டிக்கு அனுமதி கோரி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் எருதுவிடும் போட்டிக்கு அனுமதி வழங்கிய பின்னரும் இளைஞர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
இதன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தின் போது காவல் அதிகாரி இளைஞரை லத்தி மற்றும் பூட்ஸ் காலால் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது.
தருமபுரியில் மாயமான பள்ளி மாணவின் உடல் எலும்பு கூடுகளாக மீட்பு
இந்நிலையில், இது தொடர்பாக மாவட்ட எஸ்பி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி “நேற்று நடந்த எருது விடும் விழாவில் வெளி மாநிலத்தில் இருந்து அதிக நபர்கள் வந்தார்கள். அவர்கள் உள்ளூர் மக்களிடம் தவறாக நடந்து கொண்டனர். அங்கு செல்லக்கூடிய உள்ளூர் மக்களுக்கு வழி விடாமல் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி, பொதுமக்கள் மற்றும் பெண் காவலர்களிடம் தவறாக நடந்துகொண்டனர். அந்த நபர்களை பிடித்து வந்தாலும் மீண்டும் தப்பி ஓடினார்கள். அவர்களை அமர சொன்னால் காவல் துறையினரை தாக்க முயன்றனர்.
தன்னிலை மறந்து பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவன், பள்ளி மாணவி ரயில் மோதி பலி
காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என அவர்களை அப்புறப்படுத்தினோம் அது தாக்குதல் கிடையாது.அந்த நபரின் சரியான முகவரி இதுவரை கிடைக்கவில்லை. முகவரி கிடைத்தபின் கைது செய்யப்படுவர் என தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் எருது விடும் விழா நடத்தும் முறையாக அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதி கடிதத்தை காவல்துறையிடம் வழங்க வேண்டும் என தெரிவித்தார். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள். வீடியோ ஆதாரங்களை கொண்டு உண்மையான குற்றவாளிகளை தேடி வருகின்றோம். இதில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டது எந்த வகையிலும் உளவுத்துறை தோல்வி என குறை கூற முடியாது என தெரிவித்தார்”.