ஓசூரில் எருது விடும் விழாவிற்கு அனுமதி கோரிய போராட்டத்தில் கலவரம்; போலீசார் குவிப்பு

By Velmurugan s  |  First Published Feb 2, 2023, 1:22 PM IST

ஒசூர் அருகே எருதுவிடும் விழாவிற்கு அனுமதி மறுத்ததால் ஆயிரக்கணக்கானோர் 3 மணி நேரமாக சாலை மறியளில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கல்வீசி தாக்கியதில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேதம் அடைந்தன.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருதுவிடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டதால் அதிகாலை முதல் இளைஞர்களும், நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் களத்திற்கு வந்தனர். 

முறையாக அனுமதி வழங்கப்படவில்லை எனக்கூறி காவல்துறையினர் அனைவரையும் விரட்டினர். இதையடுத்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். காவல்துறையினர் தடுத்ததால் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதைத் தடுக்க காவல்துறை திணறியது. 

Tap to resize

Latest Videos

புதுவையில் 64வயது மூதாட்டியுடன் உறவில் ஈடுபட்டு கம்பி எண்ணும் வட மாநில இளைஞர்

தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் கற்களை குவித்து இளைஞர்கள் பொறுப்பற்ற முறையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞர்கள் தாங்களாகவே எருதுவிடும் விழாவை நடத்த முயற்சித்தனர்.  எருதுவிடும் விழாவிற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தும் கலைந்து செல்லாத இளைஞர்களால் 3 மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

காமன் தொட்டி ,கோபச்சந்திரம்,ஆலியாளம்,சூளகிரி பகுதி இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு பேருந்து மீது கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். 10க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் சேதமடைந்தன. தற்போது மாவட்ட எஸ்பி தலைமையில் காவல்துறையினர் போலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டினர். இதனால் சாலை போக்குவரத்து சீராகி வருகிறது. சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. தற்போது போக்குவரத்து சீரானது..

click me!