கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காவல் நிலையம் அருகே பள்ளி மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணியை பாதி விலைக்கு விற்பனை செய்யும் நபர், இதனால் தமக்கு லாபம் கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் மன நிறைவு கிடைப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர காவல்நிலையம் முன்பு சான் பாஷா என்பவர் 5 ஸ்டார் மும்பை பிரியாணி என்னும் கடையை நடத்தி வருகிறார். இந்த கடையில் ஒரு சிக்கன் பிரியாணி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அருகிலேயே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு சிக்கன் பிரியாணி 40 ரூபாய்க்கும், மாணவர்களுக்கு மட்டும் ஹாட்ப் பிரியாணி 20 ரூபாய்க்கும் வழங்குவதாக கூறுகிறார்.
தினமும் 200 பிரியாணிகள் விற்பனை செய்வதாகவும், ஒரு மணியிலிருந்து ஒன்றரை மணிக்குள் பள்ளி மாணவர்கள் மட்டுமே 100 முதல் 150 பிரியாணிகளை வாங்கி சாப்பிடுவதால் சுமார் அரை மணி நேரத்தில் வியாபாரம் சூடு பிடித்து விற்று தீர்ந்துவிடுவதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். பலமணிநேரம் காத்திருந்து கூடுதல் லாபம் பெறுவதை விட, அரசு பள்ளி மாணவர்கள் சுவைத்து மகிழ்வதையே விரும்புவதாகவும் இது தமக்கு மனநிறைவை ஏற்ப்படுத்துவதாகவும் கூறுகிறார்.
ஏராளமான பள்ளி மாணவர்கள் இவரின் தினசரி வாடிக்கையாளர்களாக உள்ளது குறிப்பிடதக்கது.