கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(27), லாவண்யா (25), இந்துமதி (20) ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் ஒரே பைக்கில் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
தர்மபுரி அருகே பைக் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலி தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டணம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(27), லாவண்யா (25), இந்துமதி (20) ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் ஒரே பைக்கில் தர்மபுரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது, காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி தனியார் திருமண மண்டபம் எதிரில் வரும் போது பின்னால் அதிவேகத்தில் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்.
உடனே இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
விபத்தின் காரணமாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.