கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பிலிகுண்டுலு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரியம்மாள் (45). கூலித்தொழிலாளி. இவருடைய கணவர் குழந்தைசாமி 15 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
கள்ளக்காதல் ஜோடி புளிய மரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பிலிகுண்டுலு கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரியம்மாள் (45). கூலித்தொழிலாளி. இவருடைய கணவர் குழந்தைசாமி 15 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதயைடுத்து, அதே பகுதியை சேர்ந்த மரியசெல்வம் (45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதனிடையே, மரியசெல்வம் மதுபோதையில் வந்து சவுரியம்மாளிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், திடீரென இருவரும் புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.