கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தல், கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நபர் கைது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு காவேரிப்பட்டணம் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பாக கரு கலைப்பு மற்றும் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறியப்படுகிறது என ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நரிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக கருதரித்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் வேடியப்பன் என்ற இடைத்தரகர் மூலம் சுகுமாரனால் ஸ்கேன் செய்யப்பட்டு காயத்ரி கருவுற்றிருப்பது பெண் குழந்தை என கண்டிறியப்பட்டுள்ளது.
மேலும் கருவில் உள்ளது பெண் சிசு என்பதால் காவேரிப்பட்டணம் கொசமேடு கிராமத்தைச் சேர்ந்த உமாராணி என்பவர் மூலம் மாத்திரைகள் மற்றும் உபகரணங்கள் மூலம் கருகலைப்பு செய்துள்ளனர். இதனை அறிந்த கிருஷ்ணகிரி சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் உமாராணி வீட்டிற்கு சென்று கரு கலைப்பு செய்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் கைப்பற்றினர்.
நீலகிரியில் பிரபல உணவக சாம்பாரில் மிதந்த குட்டி எலி; உணவகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்
மேலும் அவரது வீட்டின் அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை விசாரித்த பொழுது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் கரு கலைப்பு செய்வதற்காக காத்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையிலும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் காவல்துறையினர் ஒன்றிணைந்து சித்தரிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உடன் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிம்மணபுதூர் பூசாரி வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அப்போது அந்தப் பகுதியில் ஒரு வீட்டை வேடியப்பன் வாடகைக்கு எடுத்து அதில் சட்டத்திற்கு புறம்பாக கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என கண்டறிந்து கூறி வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் வருவதை கண்டு வேடியப்பன் மற்றும் சுகுமார் ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். மேலும் அவருடன் உடந்தையாக இருந்த சங்கர் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அந்த வீட்டில் ஐந்து கர்ப்பிணி பெண்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களிடமிருந்து 29 ஆயிரத்து 500 பணத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் 18 ஆயிரத்து 500 வேடியப்பன் என்பவருக்கு அனுப்பப்பட்டதும் கண்டறியப்பட்டது.
அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி: மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை - அன்புமணி கோரிக்கை
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் அடிப்படையில் தப்பி ஓடிய இருவரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.