ஓசூர் பட்டாசு விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்கிய கர்நாடகா அரசு

By SG Balan  |  First Published Oct 29, 2023, 3:40 PM IST

ஓசூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சத்திற்க்கான காசோலையை கர்நாடகா அரசு வழங்கியுள்ளது.


ஓசூர் அருகே தமிழ்நாடு - கர்நாடகா மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள T. அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன், ஆதிகேசவன், இளம்பருதி, விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின் என ஏழு பேர் இந்த விபத்தில் பலியானார்கள். இதேபோல, நீப்பதுரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர். 

Latest Videos

undefined

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கர்நாடக அரசு சார்பில் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று T.அம்மாபேட்டை கிராமத்திற்கு வந்த கர்நாடகா மாநிலம் ஆனைக்கல் தாலுக்காவை சேர்ந்த தாசில்தார் என்.ஆர் கரியநாயக், ஆர்.ஐ சித்தராஜ், விஏஓ நாகராஜ், உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் விசாரித்தனர்.

பெற்ற மகனை விற்பனைக்கு வைத்த தந்தை! உ.பி.யில் நடந்த கந்துவட்டிக் கொடுமை!

உயிரிழந்த நபர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி கர்நாடக அரசு சார்பாக ரூ.5 லட்சம் நிவாரண உதவிக்கான காசோலையையும் வழங்கினர்.

அரூர் வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ.பொன்மணி, விஏஒ அம்பேத்கர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா மற்று ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவராணத் தொகை வழங்க முதலவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அமிர்த கலச யாத்திரை: தேனியில் இருந்து மண் கலசங்கள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு

click me!