தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே தனியார் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் மலைப்பகுதியில் கணவாய் ஆஞ்சநேயர் கோவில் அருகே 50 சுற்றுலா பயணிகளுடன் தனியார் சுற்றுலாப் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
விபத்தில் காயம் அடைந்தவர்களை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டு பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஒகேனக்கல் செல்லும் பிரதான சாலையில் பேருந்து கவிழ்ந்ததால் ஒகேனக்கல்லுக்கு செல்லும் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நல்வாய்ப்பாக பேருந்து பள்ளத்தில் கவிழாமல், சாலையில் கவிழ்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பின்றி தப்பித்தனர்.
2 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும் 60 கி.மீ. ஓடும் ஸ்கூட்டரை தயாரித்து சேலம் மாணவர் அசத்தல்
விபத்து குறித்து பேருந்தில் பயணித்த பயணிகள் கூறுகையில், மலை பாதையில் பேருந்து இறங்கும் போது வேகத்தை குறைக்காமல் வேகமாக இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம். இந்த விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவு மட்டுமே காரணம். பேருந்தில் குழந்தைகள், பெண்கள் இருக்கிறார்கள் என்று எச்சரித்த பின்னரும் ஓட்டுநர் வேகத்தை குறைக்காமல் வேகமாக பேருந்தை இயக்கியதால் தான் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நெல்லையில் மினி பேருந்து ஏறியதில் இளம் பெண் பரிதாபமாக உயிரிழப்பு