சினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து சம்பவம்; அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதியதில் 5 பேர் பலி

By Velmurugan s  |  First Published Aug 25, 2024, 11:27 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இரு மாநிலங்களை இணைக்கக் கூடிய தேசிய நெடுஞ்சாலை என்பதால் இந்த சாலையில் எப்பொழுதும் வாகனங்களின் நெரிசல் அதிகமாகவே காணப்படும். அந்த வகையில் இன்றும் வழக்கம் போல் இந்த பாதையில் வாகனங்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தன.

பாகிஸ்தானை சொந்த மண்ணில் சம்பவம் செய்த வங்கதேசம்; 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி

Tap to resize

Latest Videos

undefined

இதனிடையே பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியில் வாகனங்களை வேகத்தை குறைக்கும் விதமாக தற்காலிக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று வேகத்தடையை கடப்பதற்காக அதன் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; காதலுடன் சிறுமி விபரீத முடிவு

இதனை சற்றும் எதிர் பாராமல் பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கின. அதன்படி 8 கார்கள், 2 லாரிகள், 1 அரசுப் பேருந்து உள்பட 12 வாகனங்கள் விபத்தில் சிக்கி சேதமடைந்தன. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

click me!