தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலை விரித்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - அதிகாரிகள் ஆய்வு

By Velmurugan sFirst Published Aug 4, 2023, 2:42 PM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வீசப்பட்ட வலையில் 5 சாமி சிலைகள் இருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகேயுள்ள மருதேரி கிராமத்தை ஒட்டியவாறு தென்பெண்ணை ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் தற்பொழுது தண்ணீர் குறைவாக செல்லும் நிலையில் நிலையில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மீன் பிடிக்க படையெடுத்துள்ளனர். இந்நிலையில் மருதேரி தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணையை ஒட்டியவாறு அகரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீன் பிடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருன்தனர். 

அப்பொழுது வலை மிகவும் கனமாக இருந்த நிலையில் வலையை இழுக்க முடியாமல் இருந்துள்ளது. பின்னர் தண்ணீரில் இறங்கிய இளைஞர்கள் வலையை இழுத்து பார்த்த பொழுது வலையில் சாமி சிலைகள் சிக்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் சிலைகளை தண்ணீரில் இருந்து எடுத்து கரைக்கு கொண்டுவந்த இளைஞர்கள் நகரசம்பட்டி காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினருக்கு தகவல் அளித்தனர். 

உலகபுகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தகவலின் அடிப்படையில் வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் அனிதா, சாமி சிலைகளை மீட்டு போச்சம்பள்ளி வட்டடாட்சியர் அலுவலகம் கொண்டுவந்து ஆய்வு செய்த போது ஒரு அடியில் பெருமாள், ஆஞ்சநேயர், முருகர், கருப்பசாமி மற்றும் வீரபத்திர சாமி சிலைகள் என முதல்கட்டமாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர் அனிதா கூறுகையில் தற்போது இது கிருஷ்ணகிரி தொல்லியல் துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

13 வருடங்களாக பார்க்க வராத தந்தை; ஏக்கத்தில் சிறுமி எடுத்த விபரீத முடிவு - குடும்பத்தினர் சோகம்

அவர்கள் வந்து பார்த்தால் தான் இது ஐம்பொன் சிலையா இல்லை வேறு சிலையா என்று கண்டுபிடிக்க முடியும். அந்த ஆய்வுக்கு பின்னர் கருவுலத்தில் சாமி சிலைகள் ஒப்படைக்கப்பட்டு பின்னர் உயர் அதிகாரிகள் உத்தரவின்பேரில் சென்னைக்கு அனுப்பி வைக்கபடும் என்றார். மேலும் ஒவ்வொரு சிலையும் சுமார் 5 கிலோ வரையில் எடை இருக்கும் என்றும் தெரிவித்தார். 

click me!