கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பும் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பட்டாசு குடோனில் அவ்வப்போது வெடி விபத்து ஏற்படுவதும் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை! இந்த பகுதிகளில் மட்டும்..!
இதனால், பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த வெடி விபத்து காரணமாக அருகில் இருந்த 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இதையும் படிங்க;- 2 மாதம் காத்திருக்க முடியாதா? பயிர்கள் அழிக்கப்படும் காட்சியைக் கண்ட போது எனக்கு அழுகை வந்தது! நீதிபதி வேதனை!
பட்டாசு குடோனில் பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.