கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே வளைவில் முந்தும்போது கன்டெய்னர் லாரி மீது பைக் மோதி 3 பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலியே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த கிரி, அஜய், ராகவன் ஆகிய மூன்றுபேரும் கந்திக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். நண்பர்களான மூவரும் மாலையில் அவ்வப்போது இருசக்கர வாகனத்தில் வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாலை வேளையில் கிரி, அஜய், ராகவன் ஆகிய மூன்று பேரும் ஹீரோ பேஷன் ப்ரோ பைக்கில் பர்கூர் – ஜெகதேவி சாலை, நேரு நகர் அருகே சென்றபோது முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரியை முந்த முற்பட்டுள்ளனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் முன்னாள் சென்ற கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
வெள்ளத்தில் சிக்கி தவித்த குழந்தையை பத்திரமாக மீட்ட பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்
இந்த விபத்தில் ராகவன், அஜய் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கிரி, அரசு மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். கன்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் தகவலறிந்து சென்ற பர்கூர் காவல் துறையினர் மாணவர்களின் உடல்களை மீட்டு, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர். பர்கூரில் கன்டெய்னர் லாரி – பைக் மோதிய விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D