ஓசூரில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி கோர விபத்து; 15 பேர் காயம்

By Velmurugan s  |  First Published Dec 6, 2023, 3:15 PM IST

ஓசூர் அருகே அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் நேருக்குநேர் மோதிய விபத்தில் மாணவர்கள் உட்பட 15க்கும் மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த எலுவப்பள்ளி என்னுமிடத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஓசூரை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர் திசையில், ஓசூரில் இருந்து பாகலூர் நோக்கி சென்ற விஜய் வித்யாலய என்னும் சிபிஎஸ்இ தனியார் பள்ளி பேருந்தும், அரசுப் பேருந்தும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

வேகமாக வந்து கொண்டிருந்த அரசு பேருந்தின் டயர் வெடித்ததே பள்ளி பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளனற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்தில் பள்ளிப் பேருந்தின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. மேலும் இந்த விபத்தில், அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர், தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுநர், 2 பயணிகள், மாணவர்கள் என 15 க்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

நீர்நிலைகளை நாம் ஆக்கிரமித்தால் தண்ணீருக்கு கோபம் வரும்; ஏரியை பேரக்குழந்தைகளுடன் ஆய்வு செய்த அமைச்சர் பேட்டி

விபத்தில் காயமடைந்தவர்களை  மீட்ட பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மாணவர்களை தனியார் மருத்துவமனைக்கும், ஓசூர் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். தனியார் மருத்துவமனையில் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த மாணவர்களை முதல் உதவி சிகிக்சைக்கு பின்பு பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஓசூர் அரசு மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் ஓட்டுநர், நடத்துநர் சிகிச்சை பெற்று வரும்நிலையில் 60 வயது மூதாட்டி கௌரம்மா மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பாகளூர் போலீஸார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!