கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டூர் பகுதியில் கர்நாடகா அரசுப் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராணுவ வீரர் உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனமும், பேருந்தும் எரிந்து நாசமாகின.
கிருஷ்ணகிரி மாவட்டம் குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். ராணுவ வீரரான இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பருடன் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி என்கிற இடத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உறவினரை பார்க்க சென்றுள்ளார். பின்னர் இருசக்கர வாகனத்தில் சுந்தரேசன், கணேசன், ஆகிய இருவரும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள தடுப்புகளை கடந்து மாற்று சாலையில் செல்ல முயன்றுள்ளார்.
மெட்ரோ ரயிலில் மீன், இறைச்சி கொண்டு செல்ல தடை; பயணிகள் கொந்தளிப்பு
அப்போது பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு 60 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் கீழ் இரு சக்கர வாகனம் சிக்கிக் கொண்டு சிறிது தூரம் இருசக்கர வாகனத்தை இழுத்துச் சென்றது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி சுந்தரேசன், கணேசன் இருவரும் உயிர் இழந்தனர். இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததால் மல மல என்று தீ பேருந்துக்கு பரவியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன.
மக்களை வருத்தி லாபம் சம்பாதிப்பதா? பெட்ரோல் விலையை ரூ.10 குறைக்க ராமதாஸ் கோரிக்கை
இருப்பினும் தீ பரவியதில் பேருந்து முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதனால் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து குந்தாரப்பள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.