கிருஷ்ணகிரி அருகே துணி காய வைக்க சென்ற பெண் மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே செட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் இருசக்கர வாகன பழுது நீக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பெயர் அம்சா. அம்சா வழக்கம் போல் இன்று வீட்டில் துணிகளை துவைத்துள்ளார்.
பிறகு துவைத்த துணிகளை காய வைப்பதற்காக தனது வீட்டின் முன் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியில் துணிகளை காய வைக்க சென்றுள்ளார். அப்போது அருகே இருந்த மின்கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து கம்பி வேலியின் மீது விழுந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையும் படிங்க..11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?
இதனை அறியாத அம்சா துணிகளை வேலியின் கம்பிகள் மீது காய வைக்க, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது மின்சாரம் பாய்ந்ததில் அம்சா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதை அறிந்த அருகே இருந்தவர்கள் உடனடியாக மின் வாரிய அலுவலகத்திற்கும், காவல்துறைக்கும், தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் மின் விநியோகத்தை நிறுத்திவிட்டு அம்சாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக மின் ஒயர் அவ்வப்போது மரங்களில் இடையே சிக்கி சேதம் அடைந்து இருந்ததாகவும், இது குறித்து மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்