ஐடி ரெய்டில் வசமாக சிக்கிய சச்சிதானந்தம்.. யார் இவர்? செந்தில் பாலாஜிக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

By vinoth kumar  |  First Published Jun 2, 2023, 3:38 PM IST

மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களுக்கு சென்றால் எதுவும் கிடைக்காது என்று முன்கூட்டியே கணித்த வருமான வரித்துறையின் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் உறவினர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். 


டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் ஒப்பந்தம் கைக்கு கிடைத்த பிறகு சச்சிதானந்தம் 150 ஈச்சர் லாரிகளை வாங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களுக்கு சென்றால் எதுவும் கிடைக்காது என்று முன்கூட்டியே கணித்த வருமான வரித்துறையின் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் உறவினர்கள் மற்றும் ஒப்பந்ததார்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வருமானவரித்துறை சோதனையில் சிக்கி இருப்பவர் தான் ஈரோடு தொழிலதிபர்  சச்சிதானந்தம். ஈரோடு திண்டல் சக்தி நகர் 3-வது கிராசை சேர்ந்தவர் சச்சிதானந்தம் (65). முதலில் பைக் மற்றும் கார் உதிரி பாகங்கள் டெலிவரி செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்தார். 1993ம் ஆண்டு துவங்கிய நிறுவனம் மூலமாக நல்ல வருமானம் கிடைத்து வர ஈரோட்டில் இருந்து சேலம், கோவைக்கும் தொழில் விரிவடைந்தது. கொங்கு மண்டலத்தில் முக்கிய அந்தஸ்துக்கு வந்த  சச்சிதானந்தம் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலை கவனித்து வந்தார்.

Latest Videos

undefined

இதனிடையே, கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டார். அவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் இருந்து குடோன்களில் இருந்து மதுபானம் பாட்டில்களை கொண்டு செல்லும் ஒப்பந்தம் மூலமாக குறிப்பிட்ட சிலர் மட்டுமே கடந்த 25 வருடங்களாக கோடி கோடியாய் சம்பாதித்து வந்துள்ளனர். இதனை மாற்றி அந்த ஒப்பந்தம் மூலமான கோடிகளை மடைமாற்ற  சச்சிதானந்தத்தை பயன்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்காகவே வழக்கமாக மண்டல வாரியாக வழங்கப்படும் டாஸ்மாக் டிரான்ஸ்போர்ட் ஒப்பந்தத்தை ஒன்றாக்கி வீதிகளை மாற்றி  சச்சிதானந்ததுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் ஒப்பந்தம் கிடைத்த பிறகு 24 மணிநேரமும் செந்தில் பாலாஜி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அமைச்சரை பார்க்க வருபவர்களிடம் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் என்று  சச்சிதானந்தம் கூறிவந்துள்ளார். டாஸ்மாக்கில் சரக்கு டெலிவரி, குடோன் டெண்டர், வசூல் விவகாரம் ஆகியவற்றை  சச்சிதானந்தம் பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் ஒப்பந்தம் கைக்கு கிடைத்த பிறகு இவர் சமீபத்தில் 150 ஈச்சர் லாரிகளை வாங்கியதாக கூறப்படுகிறது. இதன் அப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ம் தேதி முதல் இவரது வீடு மற்றும் செங்கோடம்பாளையத்தில் உள்ள இவரது டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.2 கோடியே 10 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும், 150 ஈச்சர் லாரிகளை கேஸ் கொடுத்து வாங்கியதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் விரைவில் விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

click me!