கரூர் நகராட்சி சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்தவர் சேகர் (66). இவர் ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி செய்யும் காலத்தில் மிகவும் நேர்மையாக செயல்பட்டதால் இவருக்கு நல்ல பெயர் உண்டு. இவர் மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் மரக்கன்று நடுதல், கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வது என சமூக பணிகளைச் செய்து வந்தனர்.
கரூரில் மகனை இழந்த துக்கத்தில் இருந்த பெற்றோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நகராட்சி சணப்பிரட்டி எழில் நகரை சேர்ந்தவர் சேகர் (66). இவர் ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி செய்யும் காலத்தில் மிகவும் நேர்மையாக செயல்பட்டதால் இவருக்கு நல்ல பெயர் உண்டு. இவர் மனைவி கிருஷ்ணவேணி. இவர்கள் இருவரும் மரக்கன்று நடுதல், கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வது என சமூக பணிகளைச் செய்து வந்தனர்.
undefined
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல் தோல்வியால் ஒரே மகன் பாலச்சந்திரன் தற்கொலை செய்துகொண்டார். இதனால், தங்களது ஒரே மகனை இழந்த இழப்பில் இருந்து முழுவதும் விடுபடாமல் இருவரும் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தனர். உறவினர்கள் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவர்களால் மீண்டு வர முடியவில்லை. இந்தச் சூழலில் மனமுடைந்து இருந்த சேகர் - கிருஷ்ணவேணி தம்பதியினர், நேற்று அதிகாலையில் கரூர் - திண்டுக்கல் ரயில் பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
இதுதொடர்பாக உடனே பசுபதி பாளையம் போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மகன் தற்கொலையால் விரக்தியில் இருந்த தம்பதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக அக்கறையுடன் மரக்கன்றுகள் நட்டுப் பராமரித்து வந்த தம்பதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.