கரூர் நகரின் முக்கிய பகுதி செங்குந்தபுரம். இங்கு அதிகளவு டெக்ஸ் நிறுவனங்கள் செயல்படுகிறது. இதனால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் கேரள ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் ஒரு மையம் செயல்பட்டு வந்தது. காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட்டு வந்த இந்த மையத்திற்கு அடிக்கடி கார்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் வந்து சென்றனர்.
கரூரில் கேரள ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் பல முக்கிய புள்ளிகள் அங்கு அடிக்கடி வந்து உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் நகரின் முக்கிய பகுதி செங்குந்தபுரம். இங்கு அதிகளவு டெக்ஸ் நிறுவனங்கள் செயல்படுகிறது. இதனால் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வெளியூர் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் கேரள ஆயுர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் ஒரு மையம் செயல்பட்டு வந்தது. காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை செயல்பட்டு வந்த இந்த மையத்திற்கு அடிக்கடி கார்களில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் வந்து சென்றனர்.
undefined
ஆயுர்வேத சிகிச்சை அடிக்கடி செய்ய வேண்டியது இல்லையே, ஏன் இவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, ஆயுர்வேத மையத்துக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த சில பெண்கள் அறைகுறை உடையுடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். இந்த மையத்தை நடத்தி வந்த தர்மபுரி ரமேஷ்குமார், ஈசநத்தம் சின்ன அழகு ஆகியோரும் ஓடி விட்டனர்.
இதில் மையத்தின் ஒரு பகுதியில் பதுங்கி இருந்த ஒரே ஒரு அழகியை போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் அளித்த தகவலின் அடிப்படையில் ஆயுர்வேத சிகிச்சை என்ற பெயரில் விபசாரம் நடந்து வந்ததாகவும், இதற்காக பல முக்கிய புள்ளிகள் அங்கு அடிக்கடி வந்து உல்லாசம் அனுபவித்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.