அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பி இருக்கிறார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று கௌசல்யாவின் குடிசையில் புகுந்தது. தூங்கிக்கொண்டிருந்த அவர் மீது கார் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
கரூர் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே ஏராளமான குடியிருப்புகள் இருந்து வருகின்றன. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கௌசல்யா(65). இன்று அதிகாலையில் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நெடுஞ்சாலையில் கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. கௌசல்யாவின் வீடு அருகே வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பி இருக்கிறார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று கௌசல்யாவின் குடிசையில் புகுந்தது. தூங்கிக்கொண்டிருந்த அவர் மீது கார் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விபத்து குறித்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவலர்கள் உயிரிழந்த கௌசல்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காரில் வந்த 3 பேரும் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Also Read: 10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்..! ஒருவர் பலி..! 15 பேர் படுகாயம்..!