ரூ.2700,0,00,000 மதிப்பீட்டில் புதிய மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்த முதல்வர்...!

By vinoth kumar  |  First Published Jul 31, 2019, 5:54 PM IST

கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் ரூ.270 கோடியில் கட்டப்பட்ட புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.


கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் ரூ.270 கோடியில் கட்டப்பட்ட புதிய மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 12.8.2014 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், கரூர் மாவட்டத்தில் ஒரு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியும் இல்லாததைக் கருத்தில் கொண்டு, கரூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களும், மாணவ, மாணவியரும் பயன்பெறும் வகையில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்தார். 

Latest Videos

undefined

அந்த அறிவிப்பை அடுத்து கரூர் மாவட்டத்தில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு 19.1.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், இந்திய மருத்துவக் குழும விதிகளின்படி கரூர் - சனபிரெட்டி கிராமத்தில் 269 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு அரசாணை 27.6.2018 அன்று வெளியிடப்பட்டது. 

அதன்படி, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 115 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கட்டடங்களை முதல்வர் எடப்பாடி முதல்வர் பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக தலைமைச்செயலகத்தில் திறந்து வைத்தார். மேலும், முதலாம் ஆண்டு மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வகுப்பினையும் தொடங்கி வைத்தார்.

புதிதாக கட்டுப்பட்டுள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்கள் உட்பட, கூடுதலாக 1350 மருத்துவப் பட்டப்படிப்பு இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. 

click me!