கரூர் அருகே சரக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் மாயனூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மாட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவர் காரில் தனது குடும்பத்துடன் குல தெய்வம் கோயிலுக்கு வழிபாடு செய்தற்காக காரில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகில் திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராத விதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 6 மாத ஆண் குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 5 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.