கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சுதேந்திரன் (46). இவரது மனைவி சுகன்யா (39). இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பஞ்சப்பட்டி பகுதியிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது இரும் பூதிட்டியில் இருந்து பஞ்சப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்ற போது எதிரே இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த சாந்தகுமார் (35) என்பவர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.