கரூரில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட மாநகராட்சி அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்

By Velmurugan s  |  First Published Mar 7, 2023, 9:07 PM IST

கரூர் மாநகராட்சியில் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர்.


கரூர் மாநகராட்சியில் வருவாய் உதவியாளராக ரவிச்சந்திரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு பகுதியில் வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்து வரும் ரவிச்சந்திரன், தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்த மாணிக்கவாசகர் என்பவரிடம் வீட்டு வரி நிர்ணயத்திற்காக 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அவர் இது குறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

ரகசிய தகவலின் அடிப்படையில் வருவாய் உதவியாளர் ரவிச்சந்திரன் லஞ்சமாக கேட்ட 20,000 பணத்துடன் தகவல் கொடுத்த நபருடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து காந்திகிராமம் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது டிஎஸ்பி நடராஜன் மற்றும் ஆய்வாளர் சாமிநாதன் தலைமையிலான கரூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார்.

Tap to resize

Latest Videos

undefined

மீண்டும் ஊருக்குள் படையெடுக்கும் காட்டு யானைகள்; பொதுமக்கள் அச்சம்

அவரை கைது செய்த காவல் துறையினர், ரவிச்சந்திரனுக்கு உடந்தையாக இருந்த டீக்கடை உரிமையாளர் பாலாஜி என்பவரிடமும் ஆறு பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!