ஸ்டாலினும், உதயநிதியும் ஊழல், கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சாடியுள்ளார்
கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஹெலிப்பேடு தளத்தில் தரையிரங்கிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் மூலம் கரூர், பிரேம் மஹாலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து சிறப்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கரூர் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பேசிய ஜே.பி.நட்டா, கலாச்சாரம் மிக்க தமிழ் மண்ணிற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வள்ளுவர், பாரதியார் போன்றோர் இந்த மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளனர். கடுமையாக உழைக்கக்கூடியவர் செந்தில்நாதன். இந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. என்றார்.
undefined
தொடர்ந்து ஜே.பி.நட்டா பேசியதாவது: “காசி தமிழ் சங்கமம் நடத்தி தமிழத்திற்கும், காசிக்கும் இணைப்பை ஏற்படுத்தியவர் மோடி. நாம் 2019ஆம் ஆண்டில் கொரோனாவை சந்தித்தாலும், பொருளாதார வளர்ச்சியில் 11ஆவது இடத்திலிருந்து, 5ஆவது இடத்துக்கு முன்னேறினோம். மூன்றாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்தால், உலக பொருளாதாரத்தில் நாம் 3-வது இடத்திற்கு முன்னேறுவோம் என்பதில் எனக்கு ஐயப்பாடு இல்லை.
எலக்ட்ரானிக் உற்பத்தியில் முன்னேறியதோடு, செல்போன் உற்பத்தியில் "மேட் இன் சைனா" என்று இருந்ததை மாற்றியமைத்து, "மேட் இன் இந்தியா" என்று முன்னேறி இருக்கிறோம். கார் உற்பத்தியில் ஜப்பானை முந்தி இருக்கிறோம். எஃகு உற்பத்தியிலும் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் பிரதமர் மோடி.
உழவர்கள், பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரை முன்னேற்றும் திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி, உலகத்தில் உன்னதமான நாடாக இந்தியாவை மாற்றி காட்டி உள்ளார். எல்லோருக்கும் எல்லா திட்டமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக மோடியின் பல்வேறு திட்டங்கள் இருக்கிறது. 25 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே இருந்த நிலை மாறி முன்னேறி உள்ளனர். 15 கோடி விவசாயிகளுக்கு சம்பா நிதி கொடுக்கப்பட்டு வருகிறது.
ரயில்வே, கிராமப்புற வளர்ச்சி, சுகாதாரம், சென்னை மெட்ரோ என பல்வேறு திட்டங்களுக்கு தமிழகத்திற்காக கோடிக்கணக்கான ரூபாய் நிதியை அளித்து, பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது பாசம் வைத்துள்ளார்.” என்றார்.
ஒரு பக்கம் மோடியின் உன்னதமான ஆட்சி. மற்றொரு பக்கம் இந்தியா கூட்டணி ஊழல் மிகுந்த கூட்டணியாக இருக்கிறது என்ற ஜே.பி.நட்டா, “ஒரு பக்கம் மோடியின் சாதனையை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறோம். மற்றொரு பக்கம் ஊழல் கட்சியாகவும், குடும்ப கட்சியாகவும், கட்டப்பஞ்சாயத்தை நடத்தும் கட்சியாகவும் இருக்கிறது. திமுக பணத்தை கொள்ளை அடிக்கும், கட்டப்பஞ்சாயத்து செய்யும், வாரிசு அரசியல் செய்யும் கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சியும் சளைத்தவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு ஊழல்களை செய்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஊழல் கட்சியாகவும், குடும்ப கட்சியாகவும் உள்ளனர்.” என சாடினார்.
Loksabha Elections 2024 அனல் பறக்கும் வேலூர் தேர்தல் களம்: முந்தப்போவது யார்?
சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் குடும்ப கட்சியாக ஊழல் கட்சியாகவும் உள்ளனர். அதேபோல் தமிழகத்தில் ஸ்டாலினும், உதயநிதியும் கட்டப்பஞ்சாயத்தும், வாரிசு அரசியல் செய்யும் கட்சியாக உள்ளனர் என ஜே.பி.நட்டா விமர்சித்தார்.
அந்த வரிசையில் கெஜ்ரிவாலும், மணீஸ் சிசோடியாவும் ஊழல் செய்து சிறையில் உள்ளனர். இவர்கள் சனாதானத்தை இழிவாக பேசியவர்கள். சனாதனத்தை இழிவாக பேசியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என கூறி பாஜகவுக்கு ஆதரவாக ஜே.பி.நட்டா வாக்கு சேகரித்தார்.