விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சீல்; இந்து அமைப்பினர் வாக்குவாதம்

By Velmurugan s  |  First Published Sep 15, 2023, 12:30 PM IST

கரூர் மாவட்டத்தில் விதிகளை மீறி தயாரிக்கப்பட்டதாகக் கூறி 400 விநாயகர் சிலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்த நிலையில், அதிகாரிகளுடன் இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


வரும் 18ம் தேதி திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. வீடு மற்றும் பொது இடங்கள், கோவில்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம். இதற்காக, கரூரில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இந்த நிலையில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்ககேட் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த சிலை தயாரிப்பு கூடத்தில் சுமார் 400 விநாயகர் சிலைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று திடீரென்று கூடத்தில் சோதனை மேற்கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் 400 சிலைகளுடன் இருந்த கூடத்திற்கு சீல் வைத்தனர்.

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை ஊழல் அமைச்சரவையாக உள்ளது - அண்ணாமலை விமர்சனம்

சிலை தயாரிப்பு விதிகளை மீறி பிளாஸ்ட் ஆஃப் ஃபாரிஸ் என்ற கெமிக்கல் கலவையை பயன்படுத்தி சிலை தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் சிலை தயாரிப்பு கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்ததாக கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

எல்லா பக்கமும் அணை கட்டுனா எங்கடா போவேன்; போக வழி இல்லாமல் சாலையில் திக்கு முக்காடிய சிறுத்தை

விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கும் தகவல் அறிந்த சிவசேனா கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் அப்பகுதியில் திரண்டு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

click me!