கரூர் மாவட்டத்தில் விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் மணவாசி பகுதியைச் சேர்ந்தவர் மலையாண்டி மகன் பிரதீப். தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் வீட்டில் இருந்த மாணவன், அருகில் உள்ள தனியார் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக உறவுக்கார சக நண்பனுடன் சென்றுள்ளார்.
இருவரும் சென்ற நிலையில் பிரதிப் கிணற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மாணவன் பிரதீப் திடீரென கிணற்றில் நீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து உடன் சென்ற நண்பர் அளித்த தகவலின் அடிப்படையில் உறவினர்கள் வந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிமுக, பாஜக கூட்டணி கணவன், மனைவி போன்றது; தினமும் ஐ லவ் யூ சொல்ல முடியாது - எச்.ராஜா
தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவன் பிரதீப்பை உயிரிழந்த நிலையில் மீட்டனர். மாணவனின் உடலானது கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாயனூர் காவல் துறையினர் மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.