பட்டியலின மாணவன், குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்; பேருந்தில் ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் ஆத்திரம்

By Velmurugan sFirst Published Aug 28, 2023, 12:57 PM IST
Highlights

கரூர் மாவட்டத்தில் பேருந்தில் ஏற்பட்ட தகராறில் பள்ளி மாணவனை அவனது வீடு தேடி சென்று சக மாணவர்கள் தாக்கிய விவகாரத்தில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அல்லியாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மாணவர் ஒருவர் உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பள்ளி முடித்துவிட்டு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது, இவருக்கும் புலியூர் அரசு உதவி பெரும் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவருக்கும் பேருந்தில் பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பானதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அடுத்த நாள் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவரின் ஊருக்குள் சென்று மாணவர் மற்றும் அவரது பாட்டி ஆகிய இருவரையும் கும்பலாக சென்று தாக்கியுள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காயம் அடைந்த மாணவன் மற்றும் அவரது பாட்டி இருவரும் சிகிச்சைக்காக காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விற்பனைக்கு தயார் நிலையில் மாப்பிள்ளை விநாயகர், டிராகன் விநாயகர் - சதுர்த்தியை முன்னிட்டு உற்பத்தி தீவிரம்

இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், இளங்கோ (19), மணிகண்டன் (19) ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்கள், 2 பள்ளி மாணவர்கள் என 4 மாணவர்களை கைது செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாணவர் மற்றும் அவரது பாட்டியை தாக்கிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் எனவும், எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்கக் கூடாது என்று பள்ளி மாணவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பூ பறிக்கச் சென்ற சிறுமி பாலியல் வன்கொடுமை; கர்ப்பத்தால் பிடிபட்ட முதியவர்

click me!