கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி திருநங்கை தாட்சாயினி கரூர் நகர் காவல் நிலையம் அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் உள்ள அரசு காலனி பகுதியில் வசிப்பவர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த தாட்சாயினி திருநங்கையான இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சார்ந்த சந்தோஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் குமார் அவரது இருசக்கர வாகனத்தை சர்வீஸ் செய்து விட்டு வருவதாக சொல்லி விட்டு இன்று வரை வீடு வரவிடாமல் அவர்கள் குடும்பத்தினர் தடுத்து வருகின்றனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கடந்த வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் நாளன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
சிறுவன் ஆசையாக குடித்த மாம்பழ ஜூஸ் பாக்கெட்டில் எலி; அதிர்ச்சியில் பெற்றோர்
இந்நிலையில் எந்தவித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் நேற்று திடீரென கரூர் நகர காவல் நிலையம் அருகே விஷம் அருந்தும் வீடியோவை வெளியிட்டு விட்டு காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தாட்சாயிணி விஷம் அருந்தியதை அறிந்த காவலர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் தாட்சாயினியை கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கரூர் நகர காவல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.