பட்டியலின பெண் சமைப்பதை சாப்பிடுவதா? சத்துணவு திட்ட பணியாளருக்கு எதிராக போர்க்கொடி; ஆட்சியர் அதிரடி

By Velmurugan s  |  First Published Sep 6, 2023, 12:38 PM IST

கரூர் மாவட்டத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமைக்கும்  உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடாது என கிராம மக்கள் சிலர் போர் கொடி தூக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள வேலன்செட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்திற்காக மகளிர் சுய உதவி குழுவைச் சேர்ந்த பெண் சமைப்பதற்காக பணியமத்தப்பட்டுள்ளார். இந்த பெண் பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் என்பதால் பள்ளியில் சமையல் பணி செய்யக்கூடாது. அப்படி செய்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று ஊர் பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ராஜகோபால் மற்றும் தோழர் களம் அமைப்பினர்  புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை திடீரென நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Tap to resize

Latest Videos

undefined

பல்லடம் அருகே 16 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஓட்டுநரை கொத்தாக அள்ளிச்சென்ற காவல்துறை

அப்போது பட்டியலின பெண் சமைத்த உணவை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் சாப்பிட்டு பார்த்து பின்னர் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடைய பெற்றோர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பட்டியலினப் பெண் சமைத்தால் எங்கள் குழந்தை சாப்பிட முடியாது  என ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து கோபமடைந்த  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சனாதனத்தை எதிர்ப்பவர்கள் முதலில் திமுகவில் உள்ள சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் - தமிழிசை காட்டம்

பின்னர், அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.

click me!